To realise the developed India by 2020

Sunday, May 3, 2020

[India_Vision_2020] தோன்றாத் தொண்டு

 

எனக்கு தெரிந்த/தெரியாத, நான் பார்த்த/பார்க்காத அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்!!!

தோன்றாத் தொண்டு

ஒரு சிறப்பு மிக்க இலக்கிய வரலாற்று சம்பவத்துடன் ஆரம்பிக்கிறேன்..

சோழ அரச நாட்டை சுப தேவர் என்ற அரசன் தன் மனைவி கமலவதியுடன் ஆட்சி புரிந்து வந்தார்... இவர்களுக்கு திருமணமாகி நெடு நாட்களாகியும் குழந்தை பேறு இல்லாமல் இருந்து வந்தனர்... தில்லையடி கூத்தப் பெருமானிடம் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி தவம் புரிந்தனர்...

அவர்களுடைய கடும் தவத்தின் பலனாக அரசியார் (கமலவதி) கருவுற்றாள்.. கரு வளர்ந்து குழந்தை அவதரிக்கும் தருணம் நெருங்கியது.. அரச வம்சத்து ஜோதிடர்கள் இக்குழந்தை ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமானால்  மூவுலகத்தையும் ஆளக்கூடிய வல்லமை பெற்ற குழந்தையாக இருக்கும் என்றார்கள்...

இதைக்கேட்ட கமலவதி அம்மா தன் குழந்தை ஒரு நாழிகை கழித்துப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்கேற்றாற்போல் தன்னை தலைகீழாக கட்டி தொங்கவிட சொன்னார்(ஆணையிட்டார்).. அவ்வண்ணமே அரசியார் (கமலவதி அம்மாவை) தலைகீழாக கட்டி தொங்க விட்டனர்... ஜோதிடர் சொன்ன நல்ல நேரம் நெருங்கியதும் அரசியார் ஆணைப்படி கட்டை அவிழ்த்தார்கள்... அரசியாரும் (கமலவதி) அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்...

கமலவதி அம்மா தலைகீழாக தொங்கியதால் சற்று நேரம் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன... அரசியர் (கமலவதி) அன்பு மேலிட அக்குழந்தையை உச்சி மோர்ந்து என் செல்வக் கோச் செங்கணான் எனப் பெயரிட்டாள்... ஆனால் அக் குழந்தையை வளர்க்கும் பாக்கியம் கமலவதி அம்மாவுக்கு இல்லாமல் போய்விட்டது (கமலவதி அம்மாவை தலைகீழாக கட்டி தொங்க விட்டதால்.. குழந்தை பிறந்த சற்று நேரத்தில் கமலவதி அம்மா உயிரை விட்டாள்)

அதன்பிறகு சுபதேவர், தன் குழந்தையை (மகனை) நன்றாக வளர்த்து, வில்வித்தை கற்றுக் கொடுத்து, வேதங்களையும் கற்று கொடுத்து.. அதில் சிறப்புற செய்யவைத்து, உரிய நேரத்தில், உரிய பருவத்தில் தன் மகனுக்கு முடிசூடி, ஆட்சிப் பொறுப்பை கொடுத்துவிட்டு, துறவறம் பூண்டு காட்டிலேயே வாழ்ந்து சிவனடி சேர்ந்தார் (சுப  தேவர்)...

இறைவன் அருளால் கோச்செங்கட் சோழன் (தன் முன் பிறவியை உணர்ந்து) ஆலயம் கட்டுவதில் ஆர்வமானார்... அதுவே தன் பணி என்று தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்... திருவானைக்காவலில் ஆலயம் ஒன்று கட்டி யானை நுழையாதபடி சிறு வாயில் அமைத்தார்.. மற்றும் சோழ நாட்டில் ஆங்காங்கே 73 ஆலயங்கள் (மாடக்கோயில்கள்) கட்டியுள்ளார்(70 சிவன் கோயில்+ 3 பெருமாள் கோயில்)... இவருடைய ஆட்சி காலத்தில்  மக்கள் இறைவன் மீது தீராத காதல் கொண்டு மன அமைதியுடன் வாழ்ந்து முக்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்...

இறுதியில் கோச்செங்கட் சோழர் தில்லையில் தங்கி தியாகேசப் கூத்தப் பெருமானை முக்காலமும் முறையோடு வழிபட்டு சிவனடி சேர்ந்தார்... இன்றும் கோச்செங்கட் சோழர்ன் குருபூஜை மாசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது... ( புகழ்பெற்ற 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர்... இவர் 60 வது நாயன்மார் என்பது குறிப்பிடத்தக்கது)

கோச்செங்கட் சோழனின் வரலாற்று சம்பவத்திற்கும் நான் சொல்ல வரும் தோன்றாத் தொண்டு என்பதற்கும் என்ன சம்பந்தம்!!!?  என உங்கள் மனதில் ஆயிரம் கேள்விகள் தோன்றலாம்... உயிரோட்டமான சம்பந்தம் இருக்கு... இப்போது பார்ப்போமா!!!

கோச்செங்கட்சோழன் புகழுக்கும் தோன்றாத் தொண்டுக்கும் என்ன சம்பந்தம்!!!?

கமலவதி அம்மா வாழவேண்டும் என்று ஆசைப்படக் கூடிய இளைய வயது அரசி ஆவார்... ஆனால் மூவுலகையும் ஆளக்கூடிய அற்புதமான உயிராக... மக்களுக்கு பயனுள்ள மகன் தனக்கு பிறக்கப் போகிறான் என்பதால் தன் உயிரையும்(தான் வாழ வேண்டும் என்ற ஆசையும் துறந்து) துச்சமாக எண்ணி... தன்னுயிரை தியாகம் செய்தார் ( ஜோதிடர் சொன்ன படி ஒரு நாழிகை தாமதித்து தன் மகன் பிறக்க வேண்டும்.. மக்களுக்கு தன் மகன் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக.. தன்னை தலைகீழாகக் கட்டித் தொங்கவிட சொன்ன காரணத்தினால் தன்னுடைய உயிரை விட்டாள்)

மக்கள் பெற்ற பயனுள்ள வாழ்வு அனைத்தும் கோச்செங்கட்சோழன் ஆட்சி மூலமாக கிடைத்தாலும்... இந்த அற்புதமான ஆட்சிசெய்யும் மகனைப் பெற வேண்டும் என்று கடுந்தவம் புரிந்து, இறைவன் அருள் பெற்று, சரியான நேரத்தில் மகனையும் ஈன்றெடுத்து, அதற்காக தன் உயிரையும் தியாகம் செய்த கமலவதி அம்மாதான் மூல காரணம் என்றால் மிகையாகாது...

தான் உயிரோடு இருந்து நேரடியாக  மக்களுக்கு தொண்டு செய்ய முடியவில்லை என்றாலும்... தன் மகன் செய்யும் அனைத்து நல்லதுக்கும் (தொண்டுக்கும்) காரணமானவர் கமலவதி அம்மா அவர்கள்தான்...

இதுதான் தோன்றாத் தொண்டு  (புகழுக்கான இடத்தில் தான் நேரடியாக இல்லாவிட்டாலும்... நல்ல செயல்கள் நடைபெற வேண்டும் என்பதற்காக...  நல்ல நோக்கத்துடன் மறைமுகமாக செய்யும் செயல்கள், உதவிகள்  அனைத்தும் என் பார்வையில் தோன்றாத் தொண்டாகும்)

இங்கே கமலவதி அம்மாதான் என்னை பிரமிக்க வைத்தவர்.. தான் இல்லாவிட்டாலும் தான் நினைத்த அனைத்தும் தன் மகன் மூலம் நடை பெறுவதற்கு காரணமாக இருந்தவர்... அவரின் செயல் தான் தோன்றாத் தொண்டாகும்...

நாமும் நம் வாழ்க்கையில் புகழ்பெற (நாம் பெற்ற நற்பெயர்கள் அனைத்துக்கும்) கமலவதி அம்மாவைப் போல் நமக்காக நிறைய பேர் தியாகம் செய்து இருப்பார்கள்... வீடாக இருந்தால் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், பிள்ளைகள், மனைவிகள், கணவன்கள் என அவர்கள் ரூபத்தில் கமலவதி அம்மாள் இருப்பார்கள்... அலுவலகமாக இருந்தால் நம் கீழ் பணிபுரியும் நேர்மையான அலுவலர்கள் ரூபத்தில் கமலவதி அம்மாள் இருப்பார்கள்... தினம் தினம் யாரையாவது நாம் சந்திக்கும் இடத்திலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு கமலவதி அம்மாவை நம்மால் பார்க்க முடியும்... இப்படி நாம் கமலவதி அம்மாவின் தியாகத்தை நினைவுகூர்ந்து நல்ல செயல்கள் புரிவதே, அவருடைய தியாகத்திற்கு நாம் செய்யும் நன்றி உணர்வாகும்

முகவரி பவுண்டேஷன்க்கும்  கமலவதி அம்மா ரூபத்தில்  நிறைய நல்ல உள்ளங்கள் கிடைத்துள்ளனர்... அப்பேர்பட்ட நல்ல உள்ளங்கள் கண்ணுக்கு தெரியாத பல உதவிகள் (தன் பெயர் வெளியில் தெரியாமலேயே) செய்துள்ளார்கள்... அவர்கள் அனைவரையும் நான் கமலவதி அம்மாவின் மறு உருவமாக தான் பார்க்கிறேன்

உதாரணத்திற்கு... முகவரி பவுண்டேஷன் அலுவலகத்தில் எப்போதும் பசியாற சாப்பாடு  இருக்கும் (முகவரி மாணவர்கள்.. ஏழை மாணவர்கள்.. எந்நேரத்திலும் பசியோடு வருவார்கள்.. அவர்கள் முகவரி அலுவலகத்திற்கு வந்து, பசியோடு திரும்பி போகக்கூடாது என்பதற்காக...)

முகவரிக்கு வரும் மாணவர்கள் அனைவரையும் முதலில் பசியாற சொல்வோம் (நான்  இருந்தால் சொல்லுவேன், நான் இல்லையென்றால் முகவரி அலுவலர்கள்  சொல்வார்கள்.. இதை முகவரியில் ஒரு வழக்கமாகவே வைத்துள்ளோம்...) முகவரி அலுவலகத்திற்கு வரும் மாணவ மாணவிகள் அனைவரும் தன் வீட்டில் உரிமையாக சாப்பிடுவதுபோல் தான் முகவரியிலும் ஒரு குடும்பத்தை போல் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள்... பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும்... அவர்களும் முகவரியை பெருமையாக சொல்லிக்கொண்டு போவார்கள்... நாங்களும் முகவரி மாணவ மாணவிகளிடம் நற்பெயர் சம்பாதித்துக் கொள்கிறோம்...

இந்த சாப்பாடு எங்கிருந்து வருகிறது என்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும் (முகவரி அலுவலர்களுக்கு)... எந்த நேரத்தில் கேட்டாலும், எத்தனை பேருக்கு கேட்டாலும், அவர்களுக்கு எவ்வளவு சிரமம் இருந்தாலும், உடனே சாப்பாடு செய்து முகவரி அலுவலத்திற்கு கொடுத்து அனுப்புவது தீதரப்பன் அண்ணா அவர்களே (Sri Sairam Catering Service, Chennai)... யார் கண்ணுக்கும் தெரியாமல், தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல், யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதற்காக முகவரி வாயிலாக அவர்கள் செய்யும் செயலை (தொண்டே)... தோன்றாத் தொண்டாகும்..
கமலவதி அம்மாவின் ரூபமாக தான் நான் தீதராபன் அண்ணாவை (Sri Sairam Catering Service)  பார்க்கிறேன்...

இந்த அண்ணாவைப் போல் தான், கமலவதி அம்மா ரூபத்தில் நிறைய நல்ல உள்ளங்கள்(முகவரிக்கு உதவி செய்த Sponsers), மற்றும் கண்ணுக்குத் தெரியாத, பெயர் தெரியாத, நானே பார்த்திராத பல நல்ல உள்ளங்களை இறைவன் அருளால் நானும் முகவரியும் பெற்றுள்ளோம் என்பதே எங்கள் வரம்....அவர்களுடைய தோன்றாத் தொண்டுக்கு எப்போதும் நான் நன்றி உள்ளவனாக இருப்பேன்... அவர்களுடைய பாதத்தில் தலைவணங்கி, எங்கள் வெற்றியை (முகவரியின் செயல்பாடுகளை) சமர்ப்பணம் செய்வோம்...

குறிப்பாக... முகவரி மூலம் மருத்துவம் படித்த மாணவ மாணவிகள், தற்போது, மருத்துவத் துறைக்கு சவாலான, இக்கட்டான இக்காலத்தில்  Covid -19 எதிராக  போராடுகிறார்கள் என்றால் , முகவரிக்கு தெரிந்த/ தெரியாத, அறிமுகமான/அறிமுகமில்லாத பலரின் உதவியால், முகவரி மாணவர்கள் படித்த காரணத்தினால்  மட்டுமே இதெல்லாம் சாத்தியம் ஆனது... (கண்ணுக்குத் தெரியாத நபர்கள் செய்த உதவி என்பது தோன்றாத் தொண்டாகும்)

அதேபோல் தான், உங்கள் குடும்பத்தில், நீங்கள் நல்ல பெயரெடுக்க வேண்டும் என்பதற்காக, தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல், உங்களுக்காக உங்கள் குடும்பத்தார் செய்யும் தியாகத்திற்கு அதாவது தோன்றா தொண்டிருக்கு நன்றி உள்ளவர்களாக இருங்கள்... அவர்களுடைய தியாகத்திற்கு  நீங்கள் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.. என் ஆசையும் கூட...

நம்பிக்கையுடன்...
முகவரி ரமேஷ்

குறிப்பு...

ஒரு நாள்,நானும், சுமதி அக்காவும்,அவருடைய கணவர் தோத்தாத்திரி அண்ணாவும் மற்றும் அவர்களுடைய ஒரே மகளான  மீனாட்சியும்(மருத்துவம் படித்து வருகிறார்) , அவர்களுடைய வீட்டில் முகவரி பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது, தோத்தாத்திரி அண்ணா, தன் மகள் மீனாட்சியிடம் நீ முகவரிக்கு செய்யும் செயல் - உதவி (நவம்பர் 24, 2019 அன்று நடந்த முகவரி மருத்துவ மாணவர்கள் விழாவில் டாக்டர் சிவகுமாரி அவர்கள் பேசிய பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் You Tube Channel க்கு பதிவேற்றம் செய்ய.. அதன் மூலம் முகவரியை தாண்டி மற்ற மருத்துவ மாணவர்களும் பயனடைவார்கள்)  தோன்றாத் தொண்டு என சொன்னார்... நான் அதற்கு விளக்கம் கேட்க , அப்போது தோத்தாத்திரி அண்ணா 60 - வது நாயன்மார் கோச்செங்கட் சோழன் பற்றியும், அவருடைய தாயார் கமலவதி தியாகத்தைபற்றியும் எங்களுக்கு விரிவாகச் சொன்னார். என் மனதில் ஏற்படுத்திய அந்தத் தாக்கத்தின் விளைவு தான் இந்த பதிவாகும்..

தோத்தாத்திரி அண்ணாவின் குடும்பமும் நேரடியாக தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் , முகவரிக்கு தோன்றாத் தொண்டாக நிறைய உதவிகள் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

புகழ்பெற்ற தமிழறிஞர் பேராசிரியர்  அ. ச. ஞானசம்பந்தன் அவர்களின் பேரன்  தான் N. தோத்தாத்ரி அண்ணா என்பதும் குறிப்பிடத்தக்கது...

இப்பதிவுக்கு காரணமாக இருந்த தோத்தாத்திரி அண்ணாவுக்கு என் இதயபூர்வமான நன்றிகள்... நன்றி உணர்வே வாழ்க்கை...

--
With Hope...
Mugavari K Ramesh.

__._,_.___

Posted by: Mugavari K Ramesh <mugavariramesh@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Please visit the website http://www.indiavision2020.org to read inspiring articles of eminent personalities

.

__,_._,___
Share:

[India_Vision_2020] Congressional Responses to Covid19 | A Khanversation with U.S. Rep. Lisa Blunt Rochester

 

Congressional Responses to Covid19 | A Khanversation with U.S. Rep. Lisa Blunt Rochester

 

In this Khanversation, recorded on May 02, 2020, Congresswoman Lisa Blunt Rochester, a Democrat from Delaware, discusses both personal and Congressional responses to the Coronavirus pandemic. She discusses the Stimulus package, issues of equity and accountability in its execution and the need to ensure that minorities and poorer communities have access to healthcare and government assistance. She shares her personal experiences with both hate and goodness that people are showing during this testing moment in history. 


Muqtedar Khan, Ph.D
Professor
Department of Political Science and International Relations
University of Delaware
Tel: 302-831-1939
URL: http://www.ijtihad.org
 

__._,_.___

Posted by: Muqtedar Khan <muqtedar@yahoo.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Please visit the website http://www.indiavision2020.org to read inspiring articles of eminent personalities

.

__,_._,___
Share:

Saturday, May 2, 2020

[India_Vision_2020] 100 grocery kits ready for Distribution

 

100 kits each worth 1000 INR essential groceries ready for distribution on Sunday 3rd May 2020  to Irulas at Manimangalam and Gypsies at Karisangal . May the blessings be. Vaels Girl Up and Nishabdha Seva together with HIS grace.


Please find attached the image.

Nishabdha Seva Trust

Who are we?

Nishabdha Seva Trust Is a registered public charitable trust in Chennai working towards the health and educational needs of the underprivileged. We are currently providing Groceries to low wage families in and around Chennai.

1 Registered under Indian Trusts Act, 1882 : Reg No. 121/ 2018

2 PAN : AACTN9550A

3 DARPAN ID or NITI
AYYOG ID : TN/2018/0203772

4 GuideStar Number (GSN) : 10498

5. 12 AA Order No.: ITBA/EXM/S/12AA/2019-20/1016502511(1) dated 26/06/2019.

6. E anudaan iD - TN/00 details

Nishabdha Seva Cares
Total serving ~ COVID 19
Till today 17.O4.2020 :

42 Grocery KiTS worth 1000 INR per family distributed to the poorest of the poor - 19 Irulas at Chinna Kayar, 10 leprosy cured @Semmacherry and 13 others including differently abled and very old social workers.

https://bit.ly/2VygS3C

200 nos. of hygiene kits consisting of a 3 ply mask with a dettol soap, a Neem soap and Tumeric powder 50g  issued to vegetable street vendors and other needy persons.

Stranded Malaysians 150 persons were provided with food for 3 days along with Sneha food bank.

Stranded 16 persons ie Nepalese were assisted accommodation and food with Greater Chennai Corporation.

To Do NOW

🔴 51 families of Sith-als (Mason Coolies) at
Sithalapakkam.

🔴 24 families of Rohingayas at Kelambakkam.

🔴 20 families of Gypsies and 25 families of Irulas at Manimangalam.

🔴 TOTAL OF 120 families need Grocery kits

SUPPORT THE EFFORT

https://bit.ly/2X5DTxq

Google pay - Use bank account option

Acct Name Nishabdha Seva Trust Current A/c no. - 6645752240 Bank - Indian Bank Vadapalani IFSC- IDIB000V001(all zeroes).

Thanks for your contribution.

Er A Visswanathan
Social Scientist
Nishabdha Seva Founder
+ 91 9790724069

__._,_.___

Posted by: Nishabdha Seva <visswanathan.a@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Please visit the website http://www.indiavision2020.org to read inspiring articles of eminent personalities

.

__,_._,___
Share:

[India_Vision_2020] An Information and not an invitation - An upcoming event...

 

Please find attached...

__._,_.___

Posted by: Nishabdha Seva <visswanathan.a@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Please visit the website http://www.indiavision2020.org to read inspiring articles of eminent personalities

.

__,_._,___
Share:

Friday, May 1, 2020

[India_Vision_2020] 158th edition (April 2020) of eMagazine PreSense: Editorial on Suspension of MPLads + Cover story based on Post Covid19 Challenges and Opportunities + Expert views on Research, MSMEs and health + Review of Parliament performance upto Budget 2020 + Announcement about NGPL Certificate Course + Prince cartoon [1 Attachment]

 

Hi

Editorial team of eMagazine PreSense is pleased to release the 158th (April 2020) edition broadly with the following contents:

1. Editorial : K. Srinivasan writes on the impact of suspension of MPLads for two years on rural development.

2.  Cover Story 1 :  Priyadharshni Rahul and K. Srinivasan write on the perceptions shared by the respondents in a quick sample survey conducted by PreSense on the impact of Covid19. The perceptions were validated with domain experts.  Their intereviews are also carried here.

3.  Cover Story 2:  Prof. G Ramesh (IIM Bangalore) explains the impact on MSMEs and solutions to manage the crisis.

4.  Cover Story 3:  Dr A V Srinivasan (Internationally renowned neurologist) explains the impact on people who are addicted to smoking and drinking, and provides solution to come out of addiction after lockdown.

5..  Cover Story 4: Prof.  Damodharan (IIT, Madras) explains as to how the Government can make use of this opportunity and focus more on Research and innovation,

(All the above three interviews were taken by Susan Koshy over phone)

6.  Nation:  G Priyadharshni Rahul analyses the perormance of the Parliament and the Members upto the end of Budget Session 2020.  

7.  Triambak's Prince cartoon

8.  Announcement:  NGPL announces the launch of a Certificate Course on "Polity, Governance and Politics".

The eMagazine may also be downloaded from the following link.

http://www.prpoint.com/ezine/presense0420.pdf?i=1

We are confident that you will continue to enjoy this edition too.  Please share your feedback to us at editor@corpezine.com.

K. Srinivasan
Publisher and Mg. Editor
PreSense
www.corpezine.com

__._,_.___
View attachments on the web

Posted by: Prime Point Srinivasan <prpoint@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)
Please visit the website http://www.indiavision2020.org to read inspiring articles of eminent personalities

.

__,_._,___
Share:

Latest Messages

Blog Archive

India Vision Team


Publisher and Patron
K. Srinivasan,
Team:
Shivanarayan Pasupathy
Jayatheerthan
Balamurugan
Subha Ganesh
Contact
prpoint@gmail.com

India Vision website and ezine

India Vision website offers lot of information about the various aspects of Vision 2020. Please download the ezines and podcasts on this theme. Please visit http://www.indiavision2020.org

India Vision Group



India Vision 2020 is the largest Indian group for youth to discuss the strategies for realising the devleoped India by 2020. This Blog carries the feed from the India Vision discussion group. Please join the group by clicking
http://groups.yahoo.com/group/India_Vision_2020/

Blog Archive