முகவரி அன்புத் தம்பி தங்கைகளுக்கு...
காலை வணக்கம்..
திசை மாறும் பாதை
நம் குடும்பத்தில், குறிப்பாக கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு.இரவு நேரத்தில் பாலில் புரமோர் (புளித்த பால்) ஊற்றுவார்கள். அப்படி ஊற்றினால், அடுத்த நாள் காலையில் அந்தப் பால் கெட்டித்தயிர் ஆக மாறிவிடும். கெட்டித்தயிர் ஆவதற்கு ஒரு இரவு தேவைப்படுகிறது(அதாவது 12 மணி நேரம்). கெட்டித்தயிர் ஆவதற்கு முன்பே, இடையில், அவசர கதியில் எடுத்து பார்த்தாலோ அல்லது அதை நாம் சாப்பிடுவதற்கு பயன்படுத்தினால், நன்றாக இருக்காது.. குறிப்பிட்ட காலம் காத்திருந்து, கெட்டி தயிரான பிறகு சாப்பிட்டால், ருசியாக இருக்கும் அதே சமயத்தில் உடலுக்கும் நன்மை என்பதை நாம் அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருக்கிறோம்...
நம் செல்போனை சார்ஜ் ஏற்றுவது போல், நம்மூர் கோயில்களில் உள்ள கோபுர கலசம் , பிரபஞ்ச சக்தியின் அதிர்வை முழுமையாக பெற்றுக் கொள்ள,12 வருடத்திற்கு (ஒரு மாமாங்கம்) ஒரு முறை, கும்பாபிஷேகம் நடத்துவார்கள் என்பது நாம் அறிந்த அறிவியல் முறை. இதனால் அப்பகுதி மக்கள், இயற்கையான பிரபஞ்ச ஆற்றலைப் பெற்று மன அமைதியுடன் வாழ்கிறார்கள்.... இதற்கும் ஒரு கால அளவு அறிவியல் முறைப்படி இருக்கிறது என்பதே உண்மை...
ஒரு மனிதனின் சராசரி வயது 60(5*12). இதில் ஐந்தில் ஒரு பங்கான, ஒரு குறிப்பிட்ட 12 வருடங்கள் (15 வயதிலிருந்து 26 வயது வரை) தெளிவான இலக்கோடு, தன் பெற்றோர்களின் முன் அனுபவங்களை கேட்டறிந்து, அவர்கள் சொல்படி நடந்து, காத்திருக்க கற்றுக் கொண்டால், சமநிலையான, தெளிவான பார்வையுடன் கூடிய, சமுதாயத்தில் எல்லோரும் மதிக்கத்தக்க பிரகாசமான வாழ்க்கை நமக்கு கிடைக்கும்.
இங்கே தான் நாம் திசை மாறுகிறோம். இந்த வயதில் தான் நாம் யார் பேச்சையும் கேட்க மறுக்கிறோம். திசை மாறிப் போகிறோம். அப்படி....
எனக்கு தெரிந்த ஒரு மருத்துவ மாணவி (பெயர்,கல்லூரி எல்லாமே, என் மனதில் இருந்தால் போதுமானது.நட்புக்கு அதுவே அழகு...) நன்றாக படிக்கக்கூடிய ஒரு மாணவி. முதல் வருடம் நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் பெற்றார். இரண்டாவது வருடத்தில் எல்லோரும் கல்லூரியில் நல்ல பழக்கம் ஆனார்கள். கிராமத்திலிருந்து வந்த பெண் என்பதால், நாகரீக உலகம் ஏதோ அப்பெண்ணை கொஞ்சம் கவர, ஊர் சுற்ற ஆரம்பித்தாள். ஜஸ்ட் பாஸ் மட்டும் செய்தாள்... மூன்றாம் வருடத்தில், தன் தோழிகளுக்கு கூட தெரியாமல், தன் கல்லூரி சீனியர் மாணவர் ஒருவருடன் வெளியில் சென்று சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். படிப்பில் கவனம் இல்லை. அந்த வருடமும் ஜஸ்ட் பாஸ் மட்டுமே(நன்றாக படிக்கும் மாணவி என்பதால்.. கடைசி நேரத்தில் படித்து பாஸ் செய்து விடுகிறாள்)
மருத்துவ படிப்பில் இறுதி ஆண்டு என்பது முக்கியமானது. அந்த வருடத்தில், அப்பெண்ணிற்கு எதிர்பாராத விதமாக ஒரு அதிர்ச்சி செய்தி வருகிறது.அப்பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருந்த, சீனியர் மாணவருக்கு திருமணம். இந்தப் பெண்ணால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. உண்மையாக இருந்தேனே என அவளால் ஜீரணிக்க முடியாமல் தவித்தாள்.(அவனுக்கு அது பெரிதாக தெரியவில்லை, இந்த பெண்ணைப் போல், நிறைய பெண்களுடன் சுற்றிக் கொண்டு இருந்துள்ளான். யாரையும் யாருக்கும் தெரியாமல் கிரிமினல் புத்தியுடன்...)
இப்பெண்ணின் இறுதியாண்டு படிப்பு பாதிக்கப்படுகிறது. சரியாக படிக்காமல், இறுதியாண்டு தேர்வில், தேர்ச்சி பெறவில்லை.(நன்றாக படிக்கும் பெண்ணாக இருந்தாலும், இந்த பாதிப்பால் படிக்க முடியவில்லை என்பதே உண்மை...) இவ்வளவும் நடந்த பிறகு தான், எல்லா விபரங்களும், அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. நம்முடைய மகளா இப்படி என அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி (அதிகமான சுதந்திரம் கொடுத்து விட்டோம் என்ற குற்ற உணர்வுடன் பெற்றோர்...)
அப்பெண்ணை, பெற்றோர்கள் கண்ணீரோடு தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று, நிபுணத்துவம் பெற்ற மனநிலை மருத்துவர் மூலம் கவுன்சிலிங் கொடுத்து, யோகா கற்றுக் கொள்ள செய்து, சமநிலை உள்ள, தெளிவான பார்வை உள்ள பெண்ணாக உருவாக்கினார்கள்... அதன் பிறகு நன்றாக படித்து, எல்லா தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்து, PG நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று,தற்போது முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்களிடம் சொல்ல முடியாத (மறைக்கக் கூடிய) எந்த செயலை, நாம் செய்தாலும் அது நமக்கு தீமையானது என என் அனுபவத்தில் நான் கற்று/தெரிந்து கொண்டேன் என்றால் அந்த மருத்துவ மாணவி. திசைமாறி சென்று, நிறைய காயங்களோடு தான் இப்படிப்பட்ட பாடத்தை, நான் கற்றுக் கொண்டேன் என வலியோடு சொன்னார். திசை மாறிப் போன, பாதையில் திரும்பி வந்தாலும், என்னை நம்பிய, சுதந்திரமாக விட்ட என் பெற்றோருக்கு நான் உண்மையாக இல்லை என்ற காயத்தின் வடு(தழும்பு), அவ்வப்போது எனக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்கிறார்.
நாம் செய்யும் செயலை எவ்வித ஒளிவுமறைவும் இல்லாமல் நம் பெற்றோரிடம் சொல்ல முடிந்தால் மட்டுமே, நாம் திசை மாறாமல், சரியான பாதையில் செல்கிறோம் என்பதாகும். அப்படி சொல்ல முடியாத எந்த செயலை நாம் செய்தாலும், புரிந்து கொள்ள வேண்டியது நம்மிடம் தவறு உள்ளது என்று. நாம் திசை மாறிய பாதையில் செல்கிறோம் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்...
அதுவும், இந்த 15 வயதிலிருந்து 26 வயது வரை, பக்குவம் இல்லாத, இந்த நிலைகெட்ட , சமநிலை இல்லாத வயதில், உங்க பெற்றோர்களுடன், உங்களால் என்ன வெளிப்படையாக பேச/ சொல்ல முடியுமா அதை மட்டுமே செய்யுங்கள். திசை மாறியும் செல்லாமல், குற்ற உணர்வோடும் இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்... காத்திருப்புடன் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் நிச்சயமாக பெரிய பலன் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள்... Please...
தீமை நடக்கும் இடத்தில், நான் தீமை செய்யாவிட்டாலும், நான் அமைதியாக இருந்தாலும், அந்த தீமையில் எனக்கும் பங்கு உண்டு என்பதே என் மனநிலை... உங்கள் எல்லோரையும் தம்பி தங்கைகள் என்று, வெறும் வார்த்தைக்காக சொல்லாமல், உண்மையாகவே உங்களை தம்பி தங்கைகள் ஆக நினைக்கும் காரணத்தினால்தான், நீங்கள் அறியாமல் செய்யும் சிறு தவறுக்கும், நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்றால், நீங்கள் திசை மாறிப் போய் வாழ்க்கையை தொலைத்து விடுவீர்களோ என்ற பயத்தினால் (நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட பேசாமல் போவார்கள்... நீங்கள் என்னை எதிரியாக நினைத்தாலும்.. அனுபவ அறிவுரை சொன்னா, எதிரியாக தான் நினைப்பார்கள்) உங்களிடம் முகவரிக்கு எதற்காக, என்ன சொல்லி வந்தீர்களோ, நன்றாகப் படித்து, உங்கள் இலக்கை அடைந்து,பெற்றோருக்கு பெருமை சேருங்கள் என எப்போதும் உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்...
தங்கள் அனைவரையும் தம்பி தங்கைகள் என்று, நான் சொல்லும் என் வார்த்தையில், என் உயிர் கலந்து இருப்பதாகவே நினைக்கிறேன்... நீங்களும் அதற்கேற்ப, என்னை தங்கள் அண்ணனாக நினைத்து, நான், சொல்லும் அனுபவம் சார்ந்த உண்மையில், உங்கள் மனதிற்கு உண்மை என தோன்றினால், தங்கள் பெற்றோரிடம் சொல்ல முடியாத எந்த செயலையும் செய்யாதீர்கள்.Please..
நம்பிக்கையுடன்...
ரமேஷ் அண்ணா
குறிப்பு...
என் ஆரம்ப காலத்தில், என்னிடம் பழகும் அனைவரிடமும் பாகுபாடு பார்க்காமல் என் குடும்பத்தில் (என்னைப்போலவே அவர்களையும்) ஒருவராகவே நினைத்து, என் நல்லது கெட்டது அனைத்தையும் சொல்வேன்... பெரும்பாலானோர் சூழ்நிலைக்கேற்ப, சுயநலத்துடன் செயற்பட்ட காரணத்தினால நான் நிறைய, காயப்பட்டு/ பாதிக்கப்பட்டு/அவமானப்பட்டு, துரோகத்தையும் சந்தித்திருக்கிறேன்... என் நீண்ட அனுபவத்தின் காரணமாக, தற்போது யாரிடமும் எதையும் வெளிப்படையாக பேசுவதில்லை. எனக்கென்று ஒரு கட்டுப்பாட்டை வரையறுத்துக் கொண்டேன் (குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மட்டுமே உண்மையாக இருந்தால் போதும் என்ற மனநிலை)
அந்த ஒரு சில நம்பிக்கைக்குரிய நபர்களில், பிருந்தாவும் ஒருவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில், இறுதியாண்டு மருத்துவம் படிக்கிறார். நாங்கள் இருவரும் நான்கு நாட்களுக்கு (8.5.2020) முன்பு,நீண்ட நேரம் மனம்விட்டு (குடும்பம் & கல்லூரி பற்றி) பேசிக்கொண்டிருக்கும்போது, பிருந்தா என்னிடம் சொன்னாள்... அண்ணா,உன்னிடமும் அம்மாவிடமும் சொல்ல முடியாத எந்த ஒரு விஷயத்தையும் எப்போதுமே நான் செய்ய மாட்டேன் (மனதளவில் கூட).அதுவும் உனக்கு நன்றாக தெரியும் அண்ணா. உனக்கு சந்தியா மட்டும் தங்கை அல்ல.. நானும் உன் தங்கை தான் அண்ணா என உணர்வுபூர்வமாக சொன்னார். பிருந்தா சொன்ன வார்த்தையில் எப்போதும் போல் உண்மை இருந்தது (ஆமாம், சந்தியாவை போல் பிருந்தாவும் என் தங்கையே...)
எனக்குள் தயக்கமான மனநிலை இப்பதிவை போடலாமா வேண்டாமா என..அறிவுரை சொல்லும் ஆசாமியாக என்னைப் பார்த்து விடுவார்களோ என்ற பயம் என்னுள் இருந்தது. தங்கை பிருந்தா தான் உங்கள் பதிவுகள் அனைத்தும் அனுபவத்தின் சாராம்சமாகவே உள்ளது அண்ணா. இந்த முக்கியமான, உணர்வுபூர்வமான பதிவு வந்தால், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் (15 வயது முதல் 26 வயது வரை) தான் செல்லும் பாதை சரியா தவறா என அறியாத, சலனம் உள்ள யாராவது ஒருவர், திசை மாறி செல்லாமல், நல்ல பாதையில் செல்வதற்கு வாய்ப்பிருக்கும் அண்ணா... இப்பதிவில் அந்த மருத்துவ மாணவி பெயரை குறிப்பிடாமல், பதிவு செய்யுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டார்.(உண்மைதானே... பெயர் குறிப்பிடாமல் பதிவு வருகிறது என அந்தப் பெண்ணிற்கும் தெரியும்.இந்த பதிவை பார்த்து யாராவது ஒருவர் திசை மாறாமல் இருந்தால், அதுவே அப்பெண்ணிற்கு மகிழ்ச்சி...)
பிருந்தாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இப்பதிவு.நன்றி பிருந்தா.நன்றி உணர்வே என் வாழ்க்கை...
--

With Hope...
Mugavari K Ramesh.
__._,_.___
Posted by: Mugavari K Ramesh <mugavariramesh@gmail.com>
Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |
Please visit the website http://www.indiavision2020.org to read inspiring articles of eminent personalities
.
__,_._,___
0 comments:
Post a Comment