எனக்கு தெரிந்த/ தெரியாத, பார்த்த/பார்த்திராத அனைவருக்கும் என் (முகவரி ரமேஷ்) மனமார்ந்த வணக்கம்...
எங்கே இருக்கிறான் என் தலைவன்?
மக்களுக்கு நல்லது செய்ய, சேவை செய்ய அதிகாரம் வேண்டும் என்கிறார்கள்... அதிகாரம் தன்னுடைய கைக்கு வந்தவுடன், அதை தக்கவைக்க தவறு செய்கிறார்கள்... அந்த ஒரு தவறை மறைக்க... தொடர்ந்து பல தவறை செய்கிறார்கள்... அதை தான் தங்களுடைய வளர்ச்சி என்று மார் தட்டிக் கொள்கிறார்கள்... இந்த குப்பை அரசியலில் என் தலைவன் எங்கே கிடைப்பான்!!!?
அரைத்த மாவையே திரும்பவும் அரைக்கும் அரசியல் வாதிகள் தான் தற்போது உள்ளார்கள்... தொலைநோக்கு பார்வையுடன் மாற்றி யோசிக்கும் மாற்றுச் சிந்தனை உள்ள தலைவன், தமிழ்நாட்டில் இல்லையே என்ற ஏக்கம்!!!? என்னைப்போல் உள்ள சாதாரண பாமரனுக்கும் உள்ளது...
கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக... ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் கிட்டத்தட்ட 45 நாட்கள் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன... தினமும் மது அருந்தும் நிறைய பேர், அந்த வாசனையே தெரியாமல் மறந்து விட்டனர்...(40 நாட்கள் என்பது ஒரு மண்டலம்... தீர்க்கமுடியாத ஒரு நோயை கூட, அந்த நோயிலிருந்து முழுமையாக வெளியே வர வேண்டும் என்றால், சித்த மருத்துவ முறைப்படி 40 நாட்கள் மருந்து கொடுத்து, அந் நோயை நம் பாரம்பரிய வழக்கப்படி குணப்படுத்துவார்கள்...)
தனிப்பட்ட முறையில் நமக்கு ஏற்படும் ஒரு நோயை குணப்படுத்தவே இப்படிப்பட்ட முயற்சி எடுக்கிறார்கள் என்றால், மனித சமுதாயத்தையே அழிக்கும் மது என்ற அரக்க நோய்யை, அதாவது மதுக்கடைகளை மூட, இறைவன் நமக்கு கொடுத்த வாய்ப்பை, கை கூடி வந்த (இந்த 40 நாட்களை) இத் தருணத்தை,சரியாக பயன்படுத்த தெரியாத, அரைத்த மாவையே அரைக்கும் ஒரு அரசாங்கத்தை தான் (ஆளும் கட்சி, எதிர்க் கட்சி இரண்டும் ஒன்றே... ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் இரண்டும்...) நாம் பெற்றுள்ளோம் என்ற வேதனை என்னை வாட்டுகிறது...
என் பக்கத்து வீட்டுக்காரர், உறவுமுறையில் எனக்கு சித்தப்பா... அவர் பெயர் அம்மாசி... எனக்குத் தெரிந்து, தினமும் அவர் மது அருந்துவார். அதன் காரணமாக எந்நேரமும் அவர்கள் வீட்டில் சண்டை நடந்துகொண்டிருக்கும்.. இந்த 45 நாட்களும் அப்படி இல்லை என என் தம்பி என்னிடம் சொன்னான்..
நேற்று என் தம்பியுடன், அம்மாசி சித்தப்பா பேசிக்கொண்டிருந்தார்.. என் தம்பியும், விளையாட்டாக என்ன சித்தப்பா மதுக்கடை திறந்து விட்டார்களே... மது குடிக்க போகவில்லையா என்று கேட்க... அதற்கு அவர் நான் போகவில்லை லட்சுமணா(என் தம்பி பெயர் லட்சுமணன்...) எனக்கு மது அருந்தும் பழக்கம் மறந்தே போய்விட்டது. நான் இப்போது நன்றாக உள்ளேன் என்று கூறினார்.. எப்படி சித்தப்பா என்று என் தம்பி விளக்கம் கேட்க, முதல் பத்து நாட்கள் மட்டும்தான் கஷ்டமாக
(மதுவை மறக்க) இருந்தது... இப்போது அந்த நினைப்பே இல்லாமல் நன்றாக சாப்பிடுகிறேன் (மது அருந்தும்போது, சரியாக சாப்பிட முடியாதாம்...)
இப்போது, தன்னால் விவசாய வேலை நன்றாக செய்ய முடிகிறது... சித்தியும், தம்பியும் என்னிடம் சந்தோஷமாக பேசுகிறார்கள் லட்சுமணா.. ஆதலால் இனி நான் உறுதியாக மது அருந்த மாட்டேன் என்று அவர் சொன்னதை - இருவரும் பேசிக் கொள்வதை, நான், என் காதுபட கேட்டேன் (நான் தற்போது சொந்த ஊரில் உள்ளேன் அல்லவா...)
இரண்டு நாட்களுக்கு (06.05.2020) முன்பு என் அம்மாவும் என்னிடம், மாமா (அம்மாவின் தம்பி) இந்த 45 நாட்களிலும் மது அருந்தாமல், இருக்கிற இடம் தெரியாமல் அமைதியாக இருக்கிறான்... நாளைக்கு டாஸ்மாக் கடை திறக்க போகிறார்களாம்... குடித்துவிட்டால் எப்போதும்போல் என்னிடம் சண்டைக்கு தான் வருவான் (சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை, இருக்க இருக்க அவன் உடல்நிலை கெட்டு போகிறது.. அதுதான் கவலையாக உள்ளது என்று என் அம்மா சொன்னார்) இந்த டாஸ்மாக் கடைகளை அரசாங்கம் இப்படியே மூடி வைத்து விட்டால் நன்றாக இருக்குமே.. என்ற ஏக்கம் என் அம்மாவிடம் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது... இப்படித்தானே ஒவ்வொரு குடும்பத்திலும் நினைப்பார்கள்(எனக்கு தெரிந்த பல முகவரி மாணவர்கள் குடும்பத்திலும் இதே நிலைமை தான்...). இந்த ஏழை மக்களின் பரிதாப நிலை ஏன் அரசாங்கத்திற்கு புரியவில்லை... (ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு ஆட்சி செய்தா.. எப்படி புரியும்)
மது அருந்தும் மக்களே மறந்துபோன ஒரு விஷயத்தை, அப்படியே விட்டிருந்தால் எத்தனை ஆயிரம் குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக வாழ்வார்கள்... என்ன அவசரம் இந்த அரசாங்கத்திற்கு...(பள்ளி மற்றும் கல்லூரி கூட திறக்காத நிலையில்).இந்த குடியை மறந்து போன, இந்த அம்மாசி சித்தப்பாவையும் மீண்டும் குடிக்க வைத்து விடும் இந்த அரசாங்கம் என்பதே என் வேதனை... அரசாங்கத்தின் கொள்கையை அது தானே...
அரசாங்கத்தை நடத்த,வருமானத்திற்கு வழியில்லை என்ற ஒற்றை காரணத்திற்காக மீண்டும் மதுக்கடைகளை திறக்கும் அரசாங்கத்தை என்ன சொல்வது!!!? மாற்றி யோசிக்க தெரியாத (கரானா வைரசை விட, மனிதனே மனிதனை அழிக்கும் கொடுமையான வைரஸ் தான், இந்த அரசாங்கம்) அரசாங்கத்தை தான் நாம் பெற்றுள்ளோம் என்பது எவ்வளவு வெட்ககேடான விஷயம்!!!?
எத்தனை ஆயிரம் குடும்பத்தை காவு வாங்கி(மதுவினால் சீர்குலைந்த அக்குடும்பத்தின், பாவத்தை சம்பாதித்து), மது விற்பனையின் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலமாக.. அரசாங்க பங்களாவில் குடியிருந்து கொண்டு, சம்பளம் பெற்று, படிகள்(அலவன்ஸ்) பெற்று, உயர் ரக காரில் பவனி வந்து , தங்கள் குடும்ப நலனுக்காக மட்டுமே ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள், அப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்கு மனசாட்சியே இல்லாமல் துணை போகும் அதிகாரிகள் (ஐஏஎஸ் போன்ற படிப்புகளை படித்துவிட்டு, அரசாங்க வருமானத்திற்கு மாற்று யோசனை சொல்ல தெரியாத அதிகாரிகள்) என அனைவரும் எவ்வித உறுத்தல் இல்லாமல் வாழ்கிறார்கள் (ஏழை மக்களின் பாவத்தை/சாபத்தை சம்பாதித்து) என்பதே என் வேதனை... இப்படிப்பட்ட அரசியல்வாதிகளும்/அதிகாரிகளும் எங்கே சென்றாலும், இந்த ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பாவத்தைப் போக்க முடியாது.. அது கூட தெரியாத அளவிற்கு அவர்களை அதிகார போதை ஆட்டிவைக்கிறது...
மக்களாகிய நாமும்... எவ்வித விழிப்புணர்வும் இல்லாமல், அறியாமையில், நாம் கிணற்றுத் தவளையாக இருந்தால்.. எப்போதும் இப்படிப்பட்ட பாம்பு போன்ற அரசியல்வாதிகள் தான், நம்மைச் சுற்றி இருப்பார்கள் என்பதே நிதர்சன உண்மையாகும்...
தலைமை தாங்கும் தலைவனுக்கான தகுதி என்ன!!?...
வாழ்க்கையில் எந்தத் தப்புமே செய்யாமல், யாரையும் காயப்படுத்தாமல், தன்னுடைய வேலையை பொறுப்பா செய்து, எல்லோரையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டு, தானும் சந்தோசமாக வாழ்பவன் தான் மனிதன்... இதற்கு ஒருபடி மேலாக... நான்... என ஆரம்பித்து ஆண்டவன் சாட்சியாக பதவிப் பிரமாணம் செய்து, அதற்கு ஏற்ப பொறுப்பாக (Accountability) இருந்து, கொடுத்த வாக்குறுதியை சத்தியத்துடன் செயல்படுத்துபவனே என் பார்வையில் தலைவனாவான்...
எவ்வளவுதான் பாலை சுடச்சுட காய்ச்சியபோதும், பால் தன் சுவை குன்றாது.. சுவை அதிகரிக்கத்தான் செய்யும்... அதேபோல் தான் சங்கை சுட்டாலும் அது கருமை நிறம் ஆகாது... எப்போதும் போல் வெண்மையை மட்டுமே தரும்... அதுபோல அரசாங்கத்திற்கு வருமானமே இல்லாமல் போனாலும், ஆட்சி(நிர்வாகம்) செய்வதில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும்.. எப்போதும் மேன்மை பொருந்தியவர்கள், பெருந்தன்மையுடன், எந் நேரமும் மக்களின் நல்வாழ்வை பற்றி மட்டுமே
சிந்திப்பார்... அவன்தான் என் பார்வையில் தலைவன் ஆவான்...
தனக்கு தெரியாததை தெரியாது என்று ஏற்றுக்கொண்டு, தெரியாத விஷயத்தை, தெரிந்துகொள்ள அதற்கேற்ற துறை வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, மக்களோடு மக்களாக களத்தில் நின்று, மக்களின் மனநிலையை அறிந்து, சூழ்நிலைக்கேற்ப துணிச்சலாக முடிவெடுத்து, மக்களை நல்வழிப்படுத்தும் பணியை (சேவை) செய்பவனே என் பார்வையில் தலைவன் ஆவான்...
பெருந்தலைவர் காமராசர், கக்கன், ஜீவா போன்ற தலைவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன்... அவர்களை நான் பார்த்ததில்லை... மீண்டும் அவர்கள் ரூபத்தில், அவர்களின் நற்பண்புகள் கொண்ட ஒரு தலைவன் நமக்கு கிடைக்க மாட்டானா என்ற ஏக்கம் என்னுள் இருக்கு!!!
இப்போது எங்கே இருக்கிறான் என் தலைவன்!!!?என நான் தேடிக்கொண்டிருக்கிறேன்... நீங்களும் அந்த மனநிலையில் தான், நல்ல தலைவனை கேடி கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்... நம்மில் ஒருவராக இருக்கும் அந்த தலைவனை விரைவில் தேடிக் கண்டுபிடிப்போம்... நாம் நன்றாகத் தானே உள்ளோம் என்ற சுயநல போக்குடன் ஒதுங்கி செல்லாமல், 5 வருடத்திற்கு ஒரு முறை நமக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, நமக்கான தகுதி உள்ள, மனிதநேயமுள்ள தலைவனை சேர்ந்து எடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்... ஆசையும் கூட...
நம்பிக்கையுடன்...
முகவரி ரமேஷ்
குறிப்பு...
நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை, எனக்கு ஒரு இனம் புரியாத கோபம் இந்த அரசாங்கத்தின் மீது!!!?... அந்த கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த பதிவு...
நான் பெரும்பாலும் டிவி பார்ப்பதில்லை... தினமும் செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் மட்டுமே எனக்கு உண்டு... இப்போது வீட்டில் இருப்பதால், செய்தி பார்ப்போமே என்று பார்த்தால், எல்லாமே நெகட்டிவ் செய்தியாகவே இருக்கு (மீடியாக்காரர்கள் - தாங்கள் நினைப்பதை, நம்மை அறியாமல், நமக்குள், நம் செய்தியாக கொண்டு சேர்ப்பது தான் அவர்களின் நோக்கமாகும்) அதுவும் டாஸ்மாக் கடையில் மது வாங்க, மக்கள் கியூவில் நிற்பதைப் பார்க்கும்போது, மக்களின் அறியாமை மீது எனக்கு வருத்தம் இருந்தாலும், இதற்கு மூலகாரணமான அரசாங்கத்தின் மீது என் கோபம் அதிகரிக்கவே செய்தது... நான் மட்டும்தான் இந்த மனநிலையில் இருக்கிறேனா! இல்லை... எனக்கு தெரிந்த அளவில் பெரும்பான்மையான மக்களின் மனநிலையும் இதுவேயாகும்...
--

With Hope...
Mugavari K Ramesh.
__._,_.___
Posted by: Mugavari K Ramesh <mugavariramesh@gmail.com>
Reply via web post | • | Reply to sender | • | Reply to group | • | Start a New Topic | • | Messages in this topic (1) |
Please visit the website http://www.indiavision2020.org to read inspiring articles of eminent personalities
.
__,_._,___
0 comments:
Post a Comment